Powered By Blogger

Saturday, March 26, 2011

ஆட்டுக்கறி சூப் (sunday special)

ஆட்டுக்கறி சூப்




தேவையான பொருட்கள்:


ஆட்டுக்கறி - 250 கிராம்

வெங்காயம் - 1

தக்காளி - 1

அரிசி - 1 கைப்பிடி

காய்ந்த மிளகாய் - 2

இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

உப்பு, பெருங்காயம் - சிறிது

பட்டை, லவங்கம், கறிவேப்பிலை - தாளிக்க

மிளகு தூள் - கால் தேக்கரண்டி

புதினா இலை - சிறிது



செய்முறை:


ஆட்டுக்கறியை சுத்தம் செய்து குக்கரில் போடவும்.

அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, புதினா இலை, அரிசி, காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.

குக்கரை மூடி 5 அல்லது 6 விசில் வைக்கவும். கறி வெந்ததும் தண்ணீரை வடித்துத் தனியாக வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து அதில் கறியை வேகவைத்த நீரைச் சேர்த்து கொதிக்க வைக்கவும். பெருங்காயப் பொடி, மிளகுத் தூள் தூவி இறக்கவும்.

சுவையான சூப் தயார்

No comments:

Post a Comment