இறால் குழம்பு
தேவையானவை:
சுத்தம் செய்த இறால் - அரை கிலோ
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
தண்ணீர் 400 மில்லி லிட்டர்
மிளகாயத்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
இஞ்சித் துண்டு - 2 செ.மீ.
வெள்ளைப் பூண்டு - 2
உப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 50 கிராம்
தேங்காய் - அரை முடி
தயாரிக்கும் முறை:
இறாலை 200 மில்லி லிட்டர் தண்ணீரில் அரைத் தேக்கரண்டி உப்பும், மஞ்சள் தூளும் சேர்த்து வேக வைக்கவும்.
இறால் நன்றாக வெந்து, தண்ணீர் சுண்டும் நிலை வரும்.
மிளகாய்த்தூள், தனியாத்தூள், நறுக்கிய பெரிய வெங்காயம், வெள்ளைப் பூண்டு, இஞ்சி எல்லாவற்றையும் பசையாகும் படி நன்றாக அரைக்கவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெயைச் சூடாக்கி ஒரு வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, பொன்னிறமாக வறுக்கவும்.
பிறகு அரைத்த மிளகாய் மசாலா விழுதைச் சேர்த்து நன்றாக வறுக்கவும். பச்சை வாசனைப் போகும் வரை வறுக்க வேண்டும்.
பின்னர், வேக வைத்த இறாலைச் சேர்த்து 200 மில்லி லிட்டர் சுடுநீர் ஊற்றி, இரண்டு நிமிடம் மிதமான சூட்டில் வைக்கவும்.
அதன்பின்னர் தக்காளியைச் சேர்க்கவும். தக்காளி கொதித்து வெந்த பிறகு, தேங்காய் விழுதை 100 மில்லி லிட்டர் தண்ணீரில் நன்றாகக் கலக்கி அடித்து ஊற்றவும்.
பின்னர் 5 நிமிடம் மிதமான சூட்டில் வேக விட்டு இறக்கவும்.
அவ்வளவுதான் சுவையான இறால் மீன் குழம்பு தயார்.