Powered By Blogger

Saturday, September 3, 2011

சிக்கன் சால்னா

தேவையான பொருட்கள்:-

சிக்கன் - 1 / 2 கிலோ

மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - 2
தக்காளி - 1
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 6 பல்
எலுமிச்சை பழம் சாறு - கொஞ்சம்
ஜீரகம் - 2 டீஸ்பூன்
சோம்பு - 2 டீஸ்பூன்
மிளகு - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
பட்டை - 2
ஏலக்காய் - 5
கிராம்பு - கொஞ்சம்
தேங்காய் - 1 / 2 மூடி
எண்ணை - தேவையான அளவு

செய்முறை


முதலில் தேங்காய் அரை மூடியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணையை ஊற்றி சிறு துண்டுகளாக உள்ள தேங்காயை நன்கு நிறம் மாறும் வரை வறுத்து கொள்ளவும். வேறு ஒரு பாத்திரத்தில் ஜீரகம், சோம்பு, பட்டை, மிளகு மற்றும் கிராம்பு ஆகியவைகளை எண்ணை இல்லாமல் வறுத்து கொள்ளவும், பின்பு இரண்டையும் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.


வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு ஆகியவைகளை சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். ஒரு கடாயில் இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் எண்ணையை ஊற்றி ஒன்றன் பின் ஒன்றாக வதக்கி கொள்ளவும்.

மேலே உள்ள அனைத்தையும் மிக்ஸ்யில் போட்டு நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.

குக்கர் அல்லது ஒரு தடிமான பாத்திரத்தில், கொஞ்சம் எண்ணையை ஊற்றி சிக்கன்ஐ தண்ணீர் வடியும் வரை வறுத்துக் கொள்ளவும். பின்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து வைத்துள்ளதையும் சேர்த்து, மிளகாய் தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை பழம் சாறு, ஏலக்காய் சேர்த்து இரண்டு அல்லது மூன்று (சிக்கன் வேகும்வரை) விசில் வைத்து இறக்கவும்.


மணக்கும் சிக்கன் சால்னா ரெடி . இதை பரோட்டாவுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment