Powered By Blogger

Sunday, October 27, 2013

வேர்கடலைத் தட்டை

தேவையானவை:
வறுத்த வேர்கடலை- 1 கப்
பொட்டுக்கடலை மாவு- 3 தேக்கரண்டி
அரிசி மாவு- 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்- 2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள்- 1 தேக்கரண்டி
நெய்- 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
வேர்கடலையை தோல் நீக்கிவிட்டு மிக்ஸியில் பவுடராகப் பொடித்துக் கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்தில் போட்டு பொட்டுக்கடலை மாவு, அரிசிமாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர்விட்டுப் பிசையவும். அதன் பின்பு கறிவேப்பிலையை கிள்ளிப்போட்டு, பெருங்காயத்தூள் ஆகியவற்றையும் சேர்த்து, அதனுடன் நெய்யைக் கலந்து பிசைய வேண்டும். மாவில் கோலி அளவு எடுத்து வட்டமாக சிறிது சிறிதாகத் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

Murukku

தேவையானப்பொருட்கள்:
 Murukku – Diwali Savoury Snacks
Murukku
அரிசி மாவு_ 2 கப்
உளுந்து மாவு_ 1/2 கப்
(உளுந்தை சுமார் 2  கப் அளவிற்கு எடுத்து வெறும் வாணலியில் சிவக்க வறுத்து  நைசாக அரைத்துக் கொள்ளவும்.இந்த மாவை தேன் குழல் முறுக்கிற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.)
எள்_ 1 டீஸ்புன்
ஓமம்_1/2 டீஸ்புன்
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவையான அளவு
எண்ணெய்_தேவையான அளவு
செய்முறை
அரிசி மாவு,உளுந்து மாவு இவை இரண்டையும் 2 : 1/2    என்ற விகிதத்தில் எடுத்துக்கொள்ளவும்.இதனுடன் எள்,ஒமம்,பெருங்காயம்,உப்பு சேர்த்துக் கிளறி சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.முறுக்கு குழலில் தேன்குழல் அச்சைப் போட்டு முறுக்குகளை பிழிந்து கொள்ளவும்.
எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொன்றாக எடுத்து எண்ணெயில் போட்டு இரு புறமும் சிவக்க விட்டு நன்றாக வெந்ததும் எடுக்கவும்.