தேவையானவை:
வறுத்த வேர்கடலை- 1 கப்
பொட்டுக்கடலை மாவு- 3 தேக்கரண்டி
அரிசி மாவு- 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்- 2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள்- 1 தேக்கரண்டி
நெய்- 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
வேர்கடலையை தோல் நீக்கிவிட்டு மிக்ஸியில் பவுடராகப் பொடித்துக் கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்தில் போட்டு பொட்டுக்கடலை மாவு, அரிசிமாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர்விட்டுப் பிசையவும். அதன் பின்பு கறிவேப்பிலையை கிள்ளிப்போட்டு, பெருங்காயத்தூள் ஆகியவற்றையும் சேர்த்து, அதனுடன் நெய்யைக் கலந்து பிசைய வேண்டும். மாவில் கோலி அளவு எடுத்து வட்டமாக சிறிது சிறிதாகத் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
No comments:
Post a Comment