கோகோ சிக்கன்
தேவையான பொருட்கள்
• கோழிக்கறி - 1/4 கிலோ
• தக்காளி - 1
• வெங்காயம் 1
• பச்சை மிளகாய் - 5
• மசாலாத்தூள் - 2 ஸ்பூன்
• மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
• மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
• பூண்டு பல் - 10
• தேங்காய் பால் - 150 மில்லி
• மல்லி கீரை - 1/2 கட்டு
• உப்பு - 1/2 ஸ்பூன்
• எண்ணெய் - 5 ஸ்பூன்
• பசு நெய் - 1 ஸ்பூன்
செய்முறை
• வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாயை நறுக்கிக்கொள்ளவும்.
• வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் போட்டு தாளித்து, பிறகு பொடிதாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாயை வதக்கவும்.
• சற்று வதங்கியவுடன், சுத்தம் செய்த கோழிகறியை கொட்டி, அதனுடன் மசலாத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு கலந்து சுமார் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
• வெந்தவுடன் (சற்று திக்கலான) தேங்காய்பாலை ஊற்றி, மல்லி கீரையை அரிந்து போட்டு நன்கு கிளறவும்.
• தண்ணீர் சற்று வற்றி திக்கலானவுடன் பசு நெய் விட்டு புரட்டி இறக்கவும்.
No comments:
Post a Comment