Powered By Blogger

Saturday, September 3, 2011

வெங்காய மசாலா குழம்பு

தேவையான பொருட்கள்
• பெரிய வெங்காயம் - 2
• சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி
• பூண்டு - 6 பல்
• காய்ந்த மிளகாய் - 15
• சர்க்கரை - ஒரு சிட்டிகை
• தக்காளி - 2
• எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
• உப்பு - தேவையான அளவு


செய்முறை
• பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• காய்ந்த மிளகாயை விதையெல்லாம் எடுத்த பிறகு, தண்ணீரில் கால் மணிநேரம் ஊறவிடவும்.
• சின்ன வெங்காயம், பூண்டு இரண்டையும் தோலுரித்து ஒரு வாணலியில் எண்ணெய் இட்டு காய்ந்தவுடன் அதில் போட்டு வதக்கவும்.
• பிறகு தக்காளியையும் நறுக்கி போட்டு நன்கு வதக்கவும்.
• வதக்கியபின் எடுத்து சற்று ஆற வைத்து தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
• ஒரு சுற்று சுற்றிய பிறகு ஊற வைத்துள்ள மிளகாயை சேர்த்து அரைத்தெடுக்கவும்.
• பிறகு, வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து போட்டு தாளித்து அதில் பெரிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வரும் வரை நன்றாக வதக்கவும்.
• வதங்கிய பிறகு அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை போட்டு நன்றாக வதக்கவும். தேவையெனில் உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
• நன்றாக வதங்கி எண்ணெய் மேலாக மிதந்து வரும்போது தேவையெனில் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் அடுப்பில் வைத்து இருந்து பிறகு இறக்கவும்
.

No comments:

Post a Comment