மொஹல் சிக்கன் பிரியாணி
தேவையான பொருட்கள்:
கோழி – 1 கிலோ
பிரியாணி அரிசி – 1 கிலோ
வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 200 கிராம்
பச்சை மிளகாய் – 6
தயிர் – 200 கிராம்
வெண்ணெய் – 100 கிராம்
இனிப்பு இல்லாத கோவா – 50 கிராம் (தேவையானால்)
எண்ணெய் – 100 கிராம்
பட்டை – 2 துண்டு
லவங்கம் – 3
ஏலக்காய் – 6
இஞ்சி – 3 துண்டு
பூண்டு – 20 பல்
மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
புதினா – 1 கட்டு
செய்முறை:
இஞ்சி, பூண்டு, பட்டை, லவங்கம், ஏலக்காய் இவற்றை அரைத்து வைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பச்சை மிளகாய், வெங்காயம், புதினா போட்டு வதக்கி மூடிவிடவும். பிறகு இஞ்சி, பூண்டு மசாலா அரைத்ததையும் சேர்த்து வதக்கி மூடிவிடவும். பிறகு மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கி, கோவா, தக்காளி, தயிர், கோழிக் கறி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கி மூடி விடவும். கோழிக் கறி அரைவேக்காடு வெந்த பிறகு, தொக்கில் தண்ணீர் இருக்கும். அதில் 5 தம்ளர் வெந்நீர் ஊற்றி ஊற வைத்த பிரியாணி அரிசியைப் போட்டு குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்கவும்.
குறிப்பு: இந்த பிரியாணிக்கு மூடி போட்டுத்தான் வதக்க வேண்டும். தம் போட வேண்டும் என்றால் பாத்திரத்தில் தான் பிரியாணி தாளிக்க வேண்டும். பாத்திரத்தில் பிரியாணி கறி வெந்தவுடன் தண்ணீர் (கொதிக்க வைத்தது 5 டம்ளர்) ஊற்றி நன்றாக கொதித்த பிறகு, ஊற வைத்த பிரியாணி அரிசியை சுத்தமாக தண்ணீர் வடித்து கொதிக்கும் மசாலாவில் போட்டு நன்றாகப் பிரட்டிக் கொண்டு, மேலே தண்ணீர் இல்லாமல் இருக்கும்போது, தீயைக் குறைத்து மேலே பிளேட்டில் வெந்நீர் வைத்து தம் போடவும்.
No comments:
Post a Comment